ஆண்மை தவறேல் – 3

Tamil Kamaveri – அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, நந்தினி மெல்ல சேரில் இருந்து எழுந்துகொண்டாள். ஒரு மாதிரி வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கையே, சில வினாடிகள் பாவமாய் பார்த்தாள். அப்புறம் ‘பை அசோக்..’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். அசோக்கோ உணர்ச்சியற்ற ஜடம் மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தான். சர்வர் பையன் வந்து வைத்து விட்டு சென்ற, மில்க் ஷேக்குகள் இரண்டிலும் ஈ மொய்ப்பதையே வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் அதை தொட்டுக் கூட பார்க்காமல், பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

அசோக் ஹாஸ்டலை அடைந்தபோது, ஹாஸ்டலின் கீழ்த்தளம் ஒரே கூச்சலும், கும்மாளமுமாய் இருந்தது. எக்சாம்கள் எல்லாம் முடிந்து போன சந்தோஷத்தை, அதற்குள்ளாகவே சிலர் பீர் குடித்து கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். ஸ்பீக்கர்களில் ஒலித்த விஜய் பாட்டுக்கு, லுங்கியுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பையனை நான்கைந்து பேர் விரட்டி விரட்டி அடியை போட்டார்கள். அவனும் சிரித்துக்கொண்டே அவர்களிடம் அடி வாங்கினான். ஒரு சிலர் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். ‘பாக்கலாம்டா மச்சான்..’ என்று பார்ப்பவர்களை எல்லாம் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பிரிவை தாங்க முடியாமல் அழுதார்கள்.

ஒவ்வொருவரையும் தலையை திருப்பி திருப்பி பார்த்தவாறு, மொத்தக் கும்பலுக்கும் நடுவே அசோக் பரிதாபமாக நின்றிருந்தான். யாருமே அவனை கண்டுகொள்ளவில்லை. அவனுடைய கண்களில் அவ்வப்போது நீர் வடிவதும், அதை அவன் புறங்கையால் துடைத்துக் கொள்வதும்.. அதைக்கூட யாருமே கவனித்தார்கள் இல்லை..!! சுற்றி இருப்பவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்க, தான் மட்டும் அந்தக் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்டதை வேதனையுடன் உணர்ந்தான்..!! அவனுடைய நெஞ்சு குமுறியது.. உதடுகள் விம்ம, கண்களில் கண்ணீர் பொங்கியது..!! ‘ஏன்டா உங்க யாருக்குமே என்னை புடிக்க மாட்டேன்னுது..??’ என்று அசோக்கிற்கு சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!

அத்தியாயம் 3

“ஏ தில்.. தீவானா.. தீவானா.. ஏ தில்.. தீவானே னே.. முஜ்கோ பி.. கர் தாலா.. தீவானா..”

ஷாருக்கான் பட ஹிந்திப்பாடலை மிகவும் குஷியாக பாடிக்கொண்டே.. மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஸ்டெப் போட்டுக்கொண்டே.. புருஷோத்தமன் ஹாஸ்டல் வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான். ‘நடுவுல நடுவுல மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுக்க..’ என்பது மாதிரி.. ஹிந்தி லிரிக்சின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில்.. ஆண், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை குறிக்கும் வல்கரான தமிழ் வார்த்தைகளை இவனாக செருகிக் கொண்டான். வராண்டாவில் எதிர்ப்பட்டவர்கள்..

“எக்ஸாம் எப்படிடா பண்ணிருக்குற..?” என்று கேட்க,

“ஆன்சர்லாம் அப்படியே பிட்டு பிட்டு வச்சுட்டேன் மச்சி..” என்றான்.

கதவை தள்ளி அறைக்குள் நுழைந்தவன், ஒரு கணம் திகைத்துப் போனான். உள்ளே அசோக் அழுகிற விழிகளுடன் அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்ததும் அவசரமாய் தன் கண்களை துடைத்துக் கொண்டான். அசோக்கை அவன் பலமுறை எவ்வளவோ கேவலமாக திட்டியிருக்கிறான். எட்டி எட்டி உதைத்திருக்கிறான். எல்லாவற்றையும் அசோக் அமைதியாக தாங்கிக் கொள்வானே தவிர, அவன் இப்படி அழுது இப்போதுதான் புருஷோத்தமன் முதன்முறையாக பார்க்கிறான். சிரித்தபடியே வந்த புருஷோத்தமனின் முகம், பட்டென சீரியசாகிப் போனது.

“ஏய்.. அசோக் டியர்.. என்னாச்சு..??” என்றான்.

“எ..என்னாச்சு..? ஒ..ஒன்னுல்லையே..?”

“அப்புறம் ஏன் அழுவுற..?”

“அழுதனா.. இ..இல்லையே..”

“ப்ச்.. நடிக்காதடா.. நான்தான் பாத்துட்டனே..? என்னாச்சு.. எக்ஸாம் ஒழுங்கா எழுதலையா செல்லம்..? எல்லா கொஸ்டினும் அட்டன்ட் பண்ண டைம் பத்தலையா..?”

“அ..அதுலாம் ஒண்ணுல்ல.. எக்சாம்லாம் நல்லாதான் எழுதிருக்கேன்..”

“அப்புறம் என்ன..? என்னை பிரிஞ்சு போறேன்னு அழுவுறியா..? அப்டிலாம் நெனைக்க மாட்டியே நீ..?? என் தொல்லை வுட்டதுன்னு சந்தோஷமால இருக்கணும்..!!”

“ப்ச்.. அதுலாம் இல்ல புருசு..”

“அப்புறம் என்னடா.. ஏன் அழுவுற..? சொல்லித் தொலையேன்..”

அசோக் அதன்பிறகும் கொஞ்ச நேரம் தயங்கினான். சமாளிக்க முயன்றான். ஆனால் விஷயத்தை ரொம்ப நேரம் அவனால் மறைக்க இயலவில்லை. புருஷோத்தமன் துருவித்துருவி கேட்டது ஒரு காரணம் என்றால், அசோக்கிற்கும் அவனுடைய சோகத்தை யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது, இன்னொரு காரணம்..!! எல்லாவற்றையும் புருஷோத்தமனிடம் கொட்டி தீர்த்துவிட்டான்.

நந்தினி மீதான அவனது ஈர்ப்பு.. ஒருவருடத்துக்கும் மேலாக அவன் கொண்டிருந்த ஒருதலைக்காதல்.. போன வாரம் தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியது.. இன்று கேண்டீனில் அவள், அவனுடைய ஆசை இதயத்தில் அமிலம் ஊற்றி சென்றது.. எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்..!!

சொல்லிவிட்டு அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அசோக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரம் புகை விட்டபடி, அத்தனையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த புருஷோத்தமன் இப்போது சிகரெட்டை நசுக்கி எறிந்துவிட்டு வெறுப்பாக சொன்னான்.

“அவ்வளவு திமிரா அந்த சுள்ளான் குஞ்சுக்கு..?? புடிக்கலைன்னா புடிக்கலைன்றதை டீசண்டா சொல்ல மாட்டாளாமோ..?? வேற ஒண்ணுல்ல அசோக்.. அவளுக்கு.. மனசுக்குள்ள பெரிய ரதின்னு நெனப்பு..!! த்தா.. பணக்காரி வேறல்ல..?? பணமும், அழகும் ஒண்ணா சேர்ந்தா.. இப்படித்தான் பேசுவாளுக..!! திமிரெடுத்தவ.. போய்த் தொலையுறான்னு விடு..!!”

“என்னால முடியலைடா புருசு.. ரொம்ப கஷ்டமா இருக்கு..!! அவளை எந்தக்குறையும் இல்லாம சந்தோஷமா வச்சுக்கனும்னு சத்தியமா நெனச்சேன்.. காதலுக்கு அந்த நெனைப்பு மட்டும் போதாதாடா புருசு..??”

“ப்ச்.. ஐயையையே.. அழாதடா..!! அவளே சரியான அல்டாப்பு ராணி.. காலேஜ்ல ஒருத்தனையும் மதிக்க மாட்டா.. உன்னையா மதிப்பா..?? உனக்கு லவ் பண்றதுக்கு வேற ஆளே கெடைக்கலையா..? உன் ரேஞ்சுக்கு ஏத்தமாதிரி ஏதாவது ஆசைப்பட்டிருக்கணும்.. அதை விட்டுட்டு..!! நம்ம காலேஜ்லயே எவ்வளவு நல்ல பொண்ணுகள்லாம் இருக்குதுங்க..!!”

“இல்ல புருசு.. நம்ம காலேஜ்ல.. எங்கிட்ட பேசுன ஒரே பொண்ணு அவதான்.. அதுவும் அவளா வந்து எங்கிட்ட பேசுனா..”

“அவளா..? அவளா வந்து பேசுனாளா..? எப்போ..?”

“போன வருஷம் நாங்க ரெண்டு பேரும்.. பேப்பர் பிரசண்டேஷனுக்காக பெங்களூர் போயிருந்தோம்ல.. அப்போ..!!”

“ஓஹோ..?? இதுலாம் எப்போடா நடந்தது..? த்தா.. சொல்லவே இல்ல..??”

“நல்லா பேசுனா புருசு.. அந்த நாலு நாள்.. என்னால மறக்கவே முடியாது.. ‘சாப்டியா.. தூங்குனியா..’ன்னு.. ரொம்ப கேர் எடுத்துக்கிட்டு பேசுனா.. அதனாலதான் எனக்கு அவளை ரொம்ப புடிச்சு போச்சு..!!”

“ம்ம்ம்.. எல்லாம் அப்படித்தான் பேசுவாளுக.. நல்லா வாயிலேயே கொடுப்பாளுக..!! அப்புறம்.. நம்மளை லூஸ் ஆக்கிட்டு அவளுக எஸ் ஆயிடுவாளுக..!! திருட்டு சிறுக்கிக..!!”

“ப்ளீஸ் புருசு.. அவளை திட்டாத..”

“பார்டா.. இவ்ளோ ஆனப்புறமும்..? அவளை திட்டுனா உனக்கு வலிக்குதா..?? சூப்பரு..!! அவ்ளோ புடிக்குமாடா அவளை..??”

“ம்ம்.. புடிக்கும்..!!”

“ம்ம்ம்.. ரொம்ப கஷ்டமா இருக்கோ..?”

“செத்துடலாம் போல இருக்கு..”

“த்தா.. பேச்சை பாரு..!! அப்டியே போட்டன்னா..!!”

“அவ சொன்ன வார்த்தை அந்த மாதிரி புருசு..!! எந்தப்பொண்ணுக்கும் என் மேல லவ் வராதுன்னு சொல்லிட்டாளே..??”

“ப்ச்.. அதை சொல்றதுக்கு அவ யாருடா..??”

“அவ வேற ஏதாவது சொல்லிருக்கலாம்ல.. உன்னை விட பெரிய பணக்காரனா எதிர்பார்க்குறேன்.. ரொம்ப படிச்சவனா எதிர்பார்க்குறேன்..!! இல்லனா.. என் அத்தை பையனைத்தான் கட்டிக்கப்போறேன்.. கல்யாணத்துலையே எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல.. அப்டி ஏதாவது பொய்யாவது சொல்லிருக்கலாம்ல..?? நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாளே..??”

அசோக் அழுது பிதற்றியவாறே தன் மனக்குமுறலை வெளிப்படுத்த, இப்போது புருஷோத்தமனுடைய மனதை ஒரு குற்ற உணர்வு அரிக்க ஆரம்பித்தது. அந்த நந்தினி செய்த தவறை அவனும் செய்திருக்கிறான் என்ற உறுத்தல்தான் அது..!! குற்ற உணர்வு பொங்கும் குரலிலேயே அசோக்கிடம் சொன்னான்.

“ஸாரிடா அசோக்..!! இத்தனை நாளா.. உன் மனசு என்ன பாடுபடும்னு புரிஞ்சுக்காம.. நான் கூட ‘செல்லம்.. டியர்..’ன்னுலாம் .. பொம்பளையை கொஞ்சுற மாதிரி உன்னை கொஞ்சிருக்குறேன்.. என்னை மன்னிச்சுடுடா..!!”

“பரவாலடா.. நீதான..?? நீ என்னை எவ்வளவோ திட்டுவ.. அடிப்ப..!! ஆனா இங்க.. என்னையும் மனுஷனா மதிச்சு எங்கிட்ட பேசுற ஒரே ஆளு நீதான் புருசு.. உன் மேலலாம் எனக்கு கோவமே வராது..!!”

அசோக் அழுகிற குரலில் அந்த மாதிரி சொல்ல, புருஷோத்தமன் அப்படியே உருகிப் போனான். அவனுடைய கல்நெஞ்சில் கூட கொஞ்சமாய் ஈரம் கசிந்தது. அழுகிற அசோக்கையே பரிதாபமாக பார்த்தான். ஏனோ அசோக்கின் அழுகையை இப்போது அவனால் சகிக்க முடியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாய், அசோக்கின் புஜத்தை பற்றி இழுத்தவாறே சொன்னான்.

“நீ அழுதது போதும்.. எந்திரி..”

“எ..என்னடா..?” அசோக் புரியாமல் கேட்டான்.

“எங்கயாவது வெளில போயிட்டு வரலாம்.. வா..!!”

“எங்க..?”

“வா.. சொல்றேன்..”

“நான் வரலை புருசு.. நீ போயிட்டு வா.. எனக்கு கொஞ்ச நேரம் தனியா உக்காந்து அழனும் போல இருக்கு..!!”

“அறைஞ்சுருவேன்.. வான்னு சொல்றேன்ல.. வா..!! எந்திரி.. வேற ட்ரஸ் மாத்திக்கோ.. இந்த கருமம் புடிச்ச சட்டையை கழட்டி போட்டுட்டு.. ஏதாவது டி-ஷர்ட் இருந்தா மாட்டிக்கோ..!!”

“வேணாம் புருசு..” அசோக் தயங்க,

“அடிங்.. கெளம்புடா..!! அப்டியே போட்ருவேன்..!!” புருஷோத்தமன் அவனை விடவில்லை.

அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து..

அசோக்கும், புருஷோத்தமனும் அந்த டாஸ்மாக் பாரில் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். ஏற்கனவே ஒரு ரவுண்டு முடிந்திருந்தது. அடுத்த ரவுண்டுக்காக பிளாஸ்டிக் டம்ளர்களில் புருஷோத்தமன் விஸ்கியை நிரப்பிக் கொண்டிருந்தான். புருஷோத்தமன் மிகவும் தெளிவாகவே இருந்தான். அசோக்தான் முதன் முறை என்பதால், முதல் ரவுண்டுக்கே கண்கள் செருக காட்சியளித்தான்.

“ம்ம்.. எடுத்துக்கோ அசோக்..!! அப்போ அடிச்ச மாதிரியே.. எடுத்து கப்புன்னு ஒரு அடி பார்ப்போம்..!!”

அசோக் டம்ளரை எடுத்துக்கொண்டான். வாயில் வைத்து மொத்த விஸ்கியையும் கடகடவென உள்ளே ஊற்றிக் கொண்டான். உள்ளே ஊற்றப்பட்ட விஸ்கி.. நாக்கு, கன்னத்தின் உட்புறம், தொண்டை, நெஞ்சு என.. அடிவயிறு வரை திகுதிகுவென தீயுரசிக்கொண்டே சென்று விழுந்தது. குடித்து முடித்த அசோக் கண்களை மூடி, ‘ஆஆஆஆஹ்க்’ என்று முகத்தை சுளித்து கனைத்தான். ‘ஓவ்வ்வ்.. ‘ என வாந்தி வருவது மாதிரி குமட்டினான். அதைப் பார்த்த புருஷோத்தமன்,

“ஒண்ணுல்ல ஒண்ணுல்ல.. இந்தா.. ஊறுகாய்.. கடிச்சுக்கோ..!!”

என்றவாறு கையில் வைத்திருந்த ஊறுகாய் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினான். அசோக் அதை வாங்கி கடித்துக் கொண்டான். வாந்தி வரும் உணர்வு இப்போது காணாமல் போயிருக்க, கண்களை நிம்மதியாக திறந்து பார்த்தான். இப்போது புருஷோத்தமன் தன் பங்கு விஸ்கியை தொண்டைக்குள் ஊற்றினான். ஊறுகாய் வாங்கி கடித்துக் கொண்டவன், அசோக்கிடம் கேட்டான்.

“தம்மடிக்கிறியா..?”

“இல்ல புருசு.. வேணாம்..”

“த்தா.. சும்மா அடிடா..!! நல்லாருக்கும்..!!”

அவனே ஒரு சிகரெட் எடுத்து அசோக்கிற்கு பற்றவைத்தான். முதன்முறையாய் புகை பார்த்த அசோக்கின் நுரையீரல், முடியாமல் மறுதலிக்க.. அசோக்கிற்கு இருமல் வந்தது..!!

“ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்.. போகப்போக சரியாயிடும்.. அடி..!!”

புருஷோத்தமன் உற்சாகப்படுத்த, அசோக் புகைபிடிக்கவும் கற்றுக் கொண்டான். உள்ளே சென்ற ஆல்கஹாலும், நிக்கோடினும் அசோக்கின் சிறுமூளையை சென்று பிராண்ட.. அவனுக்கு கண்கள் செருகிக் கொண்டன.. தலை ஒருநிலையில் நில்லாமல் தடுமாறியது.. வாய் கோணிக்கொள்ள, பேச்சு குழறியது.. மயக்கம் வரும்போல் இருந்தது.

“எப்படிடா இருக்கு..?” புருஷோத்தமன் கேட்டான்.

“ஒருமாதிரி இருக்குடா.. தலை கிர்ருனுது..”

“மனசு கஷ்டத்துக்கு இது மாதிரி வேற மருந்தே இல்ல மச்சி..!!”

“ஹ்ஹா.. மருந்து நல்லாத்தான் இருக்குது.. ஆனா மனசு இன்னும் வலிக்கத்தான் செய்யுது..!!”

“ம்ம்ம்.. இதுக்குத்தான் எல்லாரும் என்னை மாதிரி இருந்து தொலைங்கடான்னு சொல்றது..!! காதலும் வேணாம்.. கல்யாணமும் வேணாம்.. ஒரு கருமாந்திரமும் வேணாம்னு..!!”

“உனக்கு காதல் புடிக்காதுன்னு எனக்கு தெரியும்.. கல்யாணமும் புடிக்காதா புருசு..?”

“மச்சி.. காதல் ஒரு பாவச்செயல்னா.. கல்யாணம் ஒரு பெருங்குற்றம்..!!”

“ஹ்ஹா.. ஏண்டா அப்படி சொல்ற..?”

“பின்ன என்ன..? உனக்கு ஒரு க்ளாஸ் பால் வேணும்னு வச்சுக்கோ.. உன் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. ஒரு ரோட்டுக் கடைலயோ.. ஒரு ரெஸ்டாரன்ட்லயோ.. இல்ல ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டல்லயோ போய்.. ஆர்டர் பண்ணி வாங்கி குடிச்சுக்கணும்..!! அதை விட்டுட்டு எந்த மடையனாவது பசு மாட்டை வாங்கி வீட்டுல கட்டுவானா..? அது குடுக்குற அரைப்படி பாலுக்காக.. அந்த மாட்டுக்கு புல்லு வைக்கணும்.. புண்ணாக்கு வாங்கி போடணும்.. தண்ணி காட்டனும்.. கழிஞ்சுச்சுனா சாணி அள்ளிப் போடணும்..!! சில கொழுப்பெடுத்த மாடுக.. நாம வச்ச புண்ணாக்கை தின்னுபுட்டு.. நம்மளையே முட்ட வருங்க..!! இதுலாம் தேவையா..? கடைக்கு போனமா.. காசை குடுத்தமா.. கப்புல வர்ற பாலை வாங்கி கப்புன்னு அடிச்சமான்னு.. போயிட்டே இருக்கணும் மச்சி..!!! என்ன.. நான் சொல்றது புரியுதா..??”

“ம்ம்.. புரியுது புரியுது..!! அந்த மாதிரி பால் குடிக்கத்தான.. நேத்து அவினாசி ரோட்டுக்கு போயிட்டு வந்த..? ம்ம்ம்..?? ஹ்ஹஹ்ஹஹ்ஹ..!!”

“ஹாஹா..!! கரெக்ட்..!!”

“ம்ம்ம்.. நீ சொல்ற லாஜிக்லாம் நல்லாத்தான் இருக்குது புருசு..!! ஆனா.. இவ்வளவு கஷ்டம் இருந்தும்.. உலகத்துல எல்லாரும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே.. அதுக்கு என்ன அர்த்தம்..??”

“உலகத்துல ஒருத்தனுக்கும் அறிவே இல்லைன்னு அர்த்தம்..!!”

“ஹஹாஹஹாஹஹா…!!”

“நான் உனக்கு சொல்ற அட்வைஸ்லாம் இதுதான் அசோக்..!! காதல், கல்யாணம்லாம் ஆம்பளைங்க அவங்களோட ஆண்மையை பொண்ணுககிட்ட அடகு வைக்கிற மேட்டர்.. தயவு செஞ்சு அந்த தப்பை மட்டும் பண்ணாத..!!”

புருஷோத்தமன் சிரிப்புடனே சொல்ல, அசோக்கின் முகம் இப்போது பட்டென சுருங்கிப் போனது. ஆம்பளை, ஆண்மை என்ற வார்த்தைகள் காதில் விழுந்ததும், நந்தினி சற்று முன் பேசிய பேச்சு எல்லாம், திரும்ப அவன் மூளையை வந்து தாக்கின. அவனுடைய முகமாற்றத்தை கவனித்த புருஷோத்தமன் கேட்டான்.

“ஏய்.. என்னடா ஆச்சு..?”

“எங்கிட்ட அடகு வைக்க என்ன இருக்கு..? அதான்.. நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்லிட்டு போயிட்டாளே..??” அசோக் பாவமாக சொல்ல, புருஷோத்தமன் எரிச்சலானான்.

“டேய்.. அவ அந்த அர்த்தத்துல சொல்லல.. நீ தேவையில்லாம உன் மனசை போட்டு கொழப்பிக்காத..!!”

“சரி.. டைரெக்டா சொல்லலை.. ஆனா அவ சொன்னதுக்கு அதுதான அர்த்தம்..? உன்னை பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி இல்லைன்னா என்ன அர்த்தம்..?”

“பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி இல்லாட்டா என்ன..? ஓ.. என்னமாத்தான் வருது..? இங்க பாரு அசோக்.. இதுலாம் சப்பை மேட்டரு..!!”

“எ..எது சப்பை மேட்டரு..?”

“நீ பாக்குறதுக்கு ஆம்பளை மாதிரி மாறுறது..!! உன் ஹேர் ஸ்டைல் மாத்து.. மீசை தாடி வச்சுக்கோ..!! அந்த கழுத்துல தொங்குற கொட்டை, நெத்தியில போட்டுருக்குற பட்டை.. அதெல்லாம் வேணாம்.. பக்தி மனசுல இருந்தா போதும்.. மண்டைலலாம் மார்க் போட்டு காட்ட வேணாம்..!! ஜிம்முக்கோ போ.. எக்சர்சைஸ் பண்ணு.. லூசா இருக்குற மஸில் எல்லாம் டைட் பண்ணு.. அவ்ளோதான்..!! உன் பேச்சு, நடைலாம் மாத்தணுமா.. அதுக்கும் கூட கோர்ஸ்லாம் இருக்கு..!! லுக், கெட்டப் மாத்துறதுலாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்.. உன் ஆட்டிட்யூட் நெறைய மாறனும்.. அதுதான் மேட்டர்..!!”

“ஆ..ஆட்டிட்யூட்னா..? பு..புரியலை..!!”

“சரி.. புரியிற மாதிரி சொல்றேன்.. நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு..!! பாக்குறதுக்கு மட்டும் ஒருத்தன் ஆம்பளை மாதிரி இருந்துட்டா போதுமா..?? ஆம்பளைன்னா.. ஒரு வீரம் இருக்கணும்.. எது வந்தாலும் எதுத்து நிக்கிற துணிச்சல் இருக்கணும்.. எவனுக்கும் பயப்பட மாட்டேன்னு ஒரு திமிரு இருக்கணும்..!! உன்னை எவனாவது மதிக்கலைன்னா.. அவனுக்காக நீ ஏன் கவலைப் படுற..? நீயும் அவனை ஏறி மிதிச்சுட்டு போயிட்டே இருக்கணும்..!! உன்னை ஒருத்தி ஆம்பளை இல்லைன்னு சொல்லிட்டு போனா.. அதுக்காக மூலைல உக்காந்து அழுதுட்டு இருப்பியா..?? அழறதை நிறுத்திட்டு எந்திரிச்சு கம்பீரமா நில்லு.. உனக்குள்ள இருக்குற ஆம்பளையை தேடி கண்டுபுடி.. ஆம்பளையா வாழ்ந்து காட்டு..!!”

புருஷோத்தமன் சொல்ல சொல்ல, அசோக் எல்லாவறையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டான். வேதனையில் இருந்த அவன் மனதுக்கு, புருஷோத்தமன் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் வேதவாக்காக ஒலித்தன. அந்த வார்த்தைகளில் இருந்த ஒரு வேகம், அவனுடைய உதிரத்தை சூடேற செய்வதை அவனால் உணர முடிந்தது.

போர் முனையில் அர்ஜுனனுக்கு அந்த புருஷோத்தமன் ஆற்றிய கீதோபதேசம் போல.. பார் முனையில் அசோக்கிற்கு இந்த புருஷோத்தமன் போதோபதேசம் ஆற்றிக் கொண்டிருந்தான். ஆண்மை பற்றி சொன்னதுடன் அவன் விட்டுவிடவில்லை. பெண்களை பற்றி தனக்கிருந்த கருத்துக்களையும் அசோக்கிற்கு அவன் போதிக்க ஆரம்பித்தான். Sunni Tamil Kamaveri

– தொடரும்